முத்துப்பேட்டை பங்களா வாசல் இணைப்பு சாலை சாக்கடை குளம் போல் தேங்கி நிற்கும் அவலம்…

◾விடை தெரியாத புதீர் படத்தில் காணப்படும் முத்துப்பேட்டை பங்களா வாசல் இணைப்பு சாலை சாக்கடை தேங்கும் குளம் போல காட்சியளிக்கிறது. மேலும் குப்பை தொட்டியாகவும் மாறி வருகிறது.

◾மிக முக்கிய சாலையாக இருக்கும் பங்களா வாசல் இணைப்பு சாலையை கடந்து சுற்று வட்டார பகுதி தெரு மக்கள் பள்ளிவாசல், மதரஸாக்கள் மற்றும் முக்கிய பள்ளிக்கூடங்கள் மேலும் பேருந்து நிலையம் ஆகியவை செல்ல வேண்டி இருக்கின்றது.

◾ஆனால் இந்த பகுதியில் அடிக்கடி சாக்கடை தேங்கி நிற்கின்றது. சரி செய்யப்பட்டாலும் மீண்டும் பழைய நிலை அவ்வபோது ஏற்பட்ட வண்ணம் இருந்து வருகிறது. பொதுமக்கள் போக்குவரத்துக்கு பெரும் இடையூராக இருந்து வருவதோடு தொற்று நோய்களை பரப்பும் அபாயமும் இருந்து வருகிறது.

◾ஆகையால் பேரூராட்சி தலையிட்டு நிரந்தரமான தீர்வு காணவும் மேலும் குப்பை தொட்டி அமைத்து தரவும் தெருமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்..