முத்துப்பேட்டை ராமஜெயம் மண்டபம் பகுதியில் தோண்டப்படும் பள்ளம் போக்குவரத்து பாதிப்பு..

முத்துப்பேட்டை ராமஜெயம் மண்டபம் அருகே ஏர்டெல் நிறுவனம் தனது சேவையை விரிவு படுத்த பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டி அதன் வழியே கேபிள் பொருத்தும் பணியை செய்து வருகிறது.

◾இதற்காக தோண்டப்படும் பள்ளம் பாதசாரிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூராக இருந்து வருவதோடு மட்டும் அல்லாமல் கேபிள் பொருத்துவதற்கு தார் சாலைகள் உடைக்கப்படுகின்றன. அந்த சாலை திரும்ப சரி செய்யப்படுமா? என்பது அந்த பகுதி மக்களின் கேள்வியாக இருந்து வருகிறது.

◾ஏற்கனவே அந்த பகுதியில் இரயில்வே பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து பாதிப்பு இருந்து வருகிறது இதனால் பொதுமக்கள் பெரும் அவதியில் இருந்து வருகின்றனர். அதை தொடர்ந்து ஏர்டெல் கேபிள் பணியும் நடைபெறுவதால் பயணிகள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர்..

◾பணியை விரைவாக முடிக்கவும் மேலும் உடைக்கப்பட்ட சாலையை சரியான முறையில் சரி செய்து மழை நேரங்களில் ஏற்படும் சாலை சேதங்களை முன்னரே தவிர்க்க வழிவகை செய்ய கேட்டுக்கொள்கிறோம்.