முத்துப்பேட்டை குளங்களில் நீர் நிரப்ப வலியுறுத்தி நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டையில் பல நாட்களாகலாக வறண்டு கிடக்கும் குளங்களை நீர் நிரப்ப வலியுறுத்தி நாளை(07.09.2018) மாலை 4.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம். (பேரூராட்சி எதிரில்)

முத்துப்பேட்டையில் நிலத்தடி நீர் வறண்டு, தண்ணீர் தேவைக்கு மிகவும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை, சரி செய்ய சமூக ஆர்வலர்கள் பல நல்ல யோசைனைகள் கூறியும், அதை சிறிதும் பொறுப்படத்தாமல் மெத்தனப்போக்குடன் செயல்படும் பேரூராட்சியை கண்டித்து நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

எனவே, இப்போராட்டத்தில் அணைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு உங்களுடைய எதிர்ப்பை பதியு செய்யுமாறு “முத்துப்பேட்டை நிலத்தடி நீர் பாதுகாப்பு குழு” சரிபாக கோரிக்கை விடுத்துள்ளார்கள்.