முத்துப்பேட்டை குளங்கள் நீர் நிரப்புவதற்காக சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன…

முத்துப்பேட்டை குளங்கள் தற்போது பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. மழையில்லா நிலையும் ஏற்பட்டு வருகின்றது. அதன் எதிரொலியாக நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தட்டுபாடு தலை தூக்கி நிற்கின்றது.

இதன் எதிரொலியாக ஆற்று நீரை கொண்டு குளங்களை நிரப்ப பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம்..

குளங்களுக்கு தண்ணீர் வரும்முன் எச்சரிக்கையாக குளங்கள் சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசகுளம் கழிவு குப்பைகளும் கழிவு நீர் கலக்காமல் இருக்க குளத்தை சுற்றி கறைகளை உயர்த்தியும் பணிகள் நடைபெற்று வருகின்றன..

அரசகுளம்,சில்லாடிகுளம், குண்டங்குலம்,கொசாகுளம்,பட்டறை குளம் மற்றும் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து குளங்களையும் சுத்திகரிக்கவும் மேலும் நீர்நிலை பாதைகளை பராமரிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது..