முத்துப்பேட்டையும் இரயில்வே நிலையமும்…

முத்துப்பேட்டை இரயில் நிலையம் தரம் குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் மற்றும் கண்டனங்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது..

இப்பிரச்சினை சம்பந்தமாக திருச்சி சிவா MP அவர்களை தர்ஹா ஒருங்கிணைப்பு அறங்காவலர் S.S.பாக்கர் அலி சாஹிப் அவர்கள் முத்துப்பேட்டை இரயில்நிலையம் சம்பந்தமாக அவர்கள் இல்லத்தில் இன்று சந்தித்தார். அச்சமயம் இரயில்வே (DRM) அதிகாரியுடன் பேசி எந்த ஒரு தகுதி குறைப்பும் செய்யகூடாது என்று வலியுறுத்தியதாகவும் வேறு எந்த குறையிருந்தாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் நான் முன்னின்று செய்து தருகிறேன் என்று கூறியதாகவும் S.S பாக்கர் அலி சாஹிப் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுளார்கள்..