முத்துப்பேட்டையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்…

முத்துப்பேட்டையில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய பாஜக அரசை கண்டித்து பந்த் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது..

நாடு முழுவதும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் பெட்ரோல் டீசல்,விலை உயர்வு. நாள்தோறும் எனக்கென்ன என்பதுபோல் ஏறிக்கொண்டே செல்கிறது. இதற்கு காரணமான மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் பல கட்சிகள் இயக்கங்கள் பந்த் அறிவித்து இருந்தனர்.

அதன் எதிரொலியாக முத்துப்பேட்டையிலும் போராட்டம் நடைபெற்றது. அதற்கு ஆதரவாக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதற்கு கார் வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் முழு ஆதரவு தெரிவித்தனர்.

போராட்ட களத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து கொய்யா மஹாலில் சிறைபிடித்தனர்..