பெட்ரோல் டீசல் விலை கண்டன போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 900 பேர் கைது..

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய பாஜக அரசை கண்டித்து முத்துப்பேட்டை நகரம் மற்றும் முத்துப்பேட்டைஒன்றியபகுதிகளான இடும்பாவனம், நாச்சிகுலம் உதயமார்த்தாண்டபுரம் , ஆலங்காடு, எடையூர், சங்கேந்தி, பாண்டி ஆகிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

முத்துப்பேட்டை, கோபாலசமுத்திரம், பாண்டி ஆகிய 3 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் வட்டார தலைவர் பாலகிருஷ்ணன், தி.மு.க. மாநில விவசாய பிரிவு செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (10-09-18) 13 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 900 பேர் கைது செய்யப்பட்டனர்.