முத்துப்பேட்டையில் பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் இளைஞர்! பெற்றோர்களே உசார்..

சமீப காலமாக அதிரை, முத்துப்பேட்டை போன்ற பகுதிகளில் இளம் வயது சிறுவர்கள் சிலர் “கஞ்சா”, “போதை ஊசிகள்”, “போதை மாத்திரைகள்” அதிகமான அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதுகுறித்து, பல அதிரை இணையதளங்கள், இந்த செய்திகளை மக்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார்கள். அதை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன் அதிரையில் கஞ்சா விற்றவர் கைதும் செய்யப்பட்டார்கள்.

இது ஒருபுறம் இருக்க, இப்போது ஒரு சில இளைஞர்கள் “பெண்களை மிரட்டி பணம் பெற்று வருகிறார்கள்” என்ற அதிர்ச்சி செய்தி ஒருவர் எங்களிடம் பகிர்ந்துள்ளார்.

எங்களை தொடர்பு கொண்ட அவர் கூறியதாவது; முத்துப்பேட்டையில் ஒரு சில இளைஞர்கள், முகநூல்(Facebook) மற்றும் பல சமூக வலைத்தளங்களின் மூலம் முத்துப்பேட்டை மற்றும் பல பகுதிகளில் இருக்கும் பெண்களை தேர்வு செய்கிறார்கள்.

அவ்வாறு தேர்வு செய்யும், அந்த பெண்களிடம் தொடக்கத்தில் நண்பனாக பழகுவது போல் பழகி, “வீடியோ கால்”, “புகைப்படங்கள்” போன்ற விவரங்களை சேமிக்கிறார்கள். பிறகு, அந்த பெண்களை மிரட்டி “பணம், நகை” போன்றவற்றை அந்த பெண்களிடம் வாங்கி வருகிறார்கள். அவ்வாறு பணம் தர மறுக்கும் பெண்களிடம், “நீ பணம் தரவில்லை என்றால், நீ அனுப்பிய “புகைப்படங்கள்”, “வீடியோ கால்” ஆதாரங்களை நான் அனைவரிடம் சொல்லுவேன், சமூக வளைந்தகளிலும் பதிவிடுவேன்” என்கிற தொனியில் மிரட்டி வருகிறார்கள்.

இது போன்று ஒருவரின் வீட்டு பெண்ணையும் மிரட்டி இருக்கிறார்கள் அந்த இளைஞர்கள். ஆனால், அந்த பெண் இந்த சம்பவத்தை அவர்கள் வீட்டில் இருக்கும் ஆண்களிடம் தெரிவித்து இருக்கிறார். அப்போது அதிர்ச்சி அடைந்த பெண்கள் வீட்டார்கள், நடந்த சம்பவத்தை தெளிவாக விசாரித்திருக்கிறார்கள். அந்த பெண்ணிடம் செய்திகளை கேட்டறிந்த பிறகு, அந்த பெண்ணிடம் உள்ள மொபைல் போனை(Mobile Phone) வாங்கிவிட்டு, “நீ எதற்கும் பயப்பட வேண்டாம். அவனை, நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட அந்த பெண் வீட்டாரை நாம் தொடர்பு கொண்டு, “மிரட்டிய அந்த இளைஞனை என்ன செய்ய போகிறீர்கள்?” “போலீசிடம் புகார் கொடுக்க போகிறார்களா?” என்பதை போன்ற சில கேள்விகளை முன்வைத்தோம். ஆனால், அதற்கு அந்த பெண் விட்டார், நாங்கள் மிகவும் கவுரவமான குடும்பம். இந்த விஷயம் வெளிய தெரிந்தால், எங்கள் குடும்பத்திற்கு கேட்ட பெயர் ஏற்படும் என்றும், எங்களின் பெண்ணிற்கு திருமணம் தொடர்பான விஷயங்களில் பிரச்சனைகள் வரும் என்பதால் போலீசிடம் புகார் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.

மேலும், எங்கள் வீட்டுப் பெண் ஆரம்பத்திலியே இந்த விஷயத்தை எங்களிடம் கூறிவிட்டார். ஆனால், அந்த இளைஞர், எங்கள் பெண்ணை மிரட்டியது போல பல பெண்களை தொடர்ந்து மிரட்டி வருகிறார். எனவே, ஏதேனும் பெண்கள் இது போன்ற இளைஞர்களால் மிரட்டப்பட்டுக் கொண்டிருந்தால் தயவு செய்து உங்கள் பெற்றோர்களிடம் உண்மையை எடுத்து கூறுங்கள். தவறுகள் இயல்பாக நடக்க கூடியதுதான், உங்களுடைய தவறை உங்கள் பெற்றோர் மன்னிக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

எங்கள் வீட்டு பெண்ணை போன்று வேறு எந்த பெண்ணும் பாதிக்கப்பட கூடாது என்றும், இவ்வாறு செய்யும் அந்த இளைஞர்களை இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகவே நான் “Muthupet.in” இணையதள குழு வாகிய உங்களிடம் பகிர்ந்தேன். மேலும், அந்த இளைஞர் அதிகமாக திருமணமான பெண்களையே குறிவைக்கிறான் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இவ்வாறு செய்யும் அந்த இளைஞர்கள், இருவரின் “பெயர்” மற்றும் “புகைப்படம்” போன்றவற்றையும் அந்த பெண் விட்டார்கள் எங்களிடம் பகிர்ந்தார்கள். எனினும், நான் தகுந்த ஆதாரங்களை தொடர்ந்து சேமித்து வருகிறேன். அந்த ஆதாரங்கள் அனைத்தும் உறுதியானதற்கு பிறகு, நீங்கள் அவர்களின் புகைப்படம் போன்றவற்றை பதிவு செய்து, இந்த சமுதாயத்திற்கு அவர்களை அடையாளம் காட்டுங்கள் என்றும் கோரிக்கை விடுத்தார்.