முத்துப்பேட்டையில் தொடர் திருட்டு. பொதுமக்களே உசார்..!!

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் தொடரும் திருட்டு சம்பவம் முத்துப்பேட்டை பகுதியிலும் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் அச்சம்.

முத்துப்பேட்டை கோவிலூரை சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் தனது இருசக்க வாகனத்தை இரவு உறங்க செல்வதற்கு முன் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். அடுத்தநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

அதேபோல் முத்துப்பேட்டை தர்மர் கோவிலை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரின் வாகனமும் இரவு உறங்கும் நேரத்தில் திருடப்பட்டது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக இருவரும் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து வாகன திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

முத்துப்பேட்டை பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்கள் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. திருடர்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.