பட்டுக்கோட்டையில் குளத்தில் மிதந்த பெண்ணை துரித முயற்சியால் காப்பாற்றினார்கள்!

பட்டுக்கோட்டை காசாங்குளம் சிவன் கோவில் வாசலில் ஆதரவற்ற மூதாட்டி செல்லக்கண்ணு(வயது 68) தவறி குளத்தில் விழுந்து சுமார் அரைமணி நேரம் குளத்திலேயே மிதந்துள்ளார்.

இந்நிலையில் அங்கு இருந்த மக்கள் அளித்த தகவலின் பேரில் விதைகள் அமைப்பினரும், கலாம் நண்பர்கள் இயக்கத்தினரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அதன்பின், உடனே அவர்கள் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பின், அந்த மூதாட்டியை உடனடியாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

பிறகு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்த டாக்டர் நியுட்டன், சரவணன், சிவா அவர்கள் உடனடியாக சிகிச்சை வழங்கி அந்த மூதாட்டியின் உயிரை காப்பாற்றினார்கள்.