மல்லிப்பட்டிணம் அருகே இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணம் அருகே மனோரா பாலத்தில் இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்பு.

புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் வடக்கைச் சேர்ந்த கஸ்தூரி. இவர் ஆலங்குடியில் பணிபுரிந்து வருகிறார். 29.10.2018 வேலைக்கு சென்ற இடத்தில் இருந்து கஸ்தூரியை கடத்திச் சென்று கை, கால்களை கட்டி மிக கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்து மல்லிப்பட்டினம் மனோரா பாலத்தில் வீசியுள்ளனர்.

நேற்று சடலத்தை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தினர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.

இந்நிலையில் படுகொலை செய்த கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி பட்டுகோட்டை – அறந்தாங்கி சாலையில் பனங்குளத்தில் சாலைமறியலில் ஈடுபட்டுவருகின்றனர்.