முத்துப்பேட்டையில் காலை முதல் நல்ல மழை…

முத்துப்பேட்டையில் அதிகாலையில் இருந்து நல்ல மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

முத்துப்பேட்டை பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் தொடங்கிய மழை மாலை நேரம் வரை நீடித்தது. திடீர் மழையால் மாணவர்கள் சிரமத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வந்தனர். சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் பெரும்பாலான முக்கிய சாலைகள் குளம்போல் காட்சியளித்தது. முக்கிய நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.