டெங்கு எதிரொலி – அசுத்தமான குடியிருப்புகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்…

திருவாரூர் பகுதிகளில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது சில குடியிருப்புகள் அசுத்தமாக பராமரிப்பு இல்லாமல் காணப்பட்டது. மேலும் அவைகள் டெங்கு கொசு உற்பத்திக்கு ஏதுவாக உள்ளதாக இருந்தது. இதனை அடுத்து கலெக்டர், அந்த குடியிருப்பு கட்டிடங்களின் உரிமையாளகளுக்கு அபராதம் விதித்தார். ரூ.25 ஆயிரம் வீதம் 4 உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தர விட்டார்.

குடியிருப்பு கட்டிடங்களில் தண்ணீர் தேங்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும், கட்டிடத்தின் மாடியில் தண்ணீர் தேங்கினாலும் டெங்கு கொசு அதிக அளவில் உற்பத்தியாக வாய்ப்புகள் உள்ளதாகவும் கலெக்டர் கூறினார்.

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. தனிமனித சுத்தம் நோய்களை அளிக்க உதவும் கேடயம். ஆகவே நம் பகுதியை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வோம். பராமரிக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.