அரசு அலுவலகம் முன்பே இந்த நிலையா? பொதுமக்கள் அதிருப்தி…

முத்துப்பேட்டையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நீண்ட நாட்களாக பெரிய டயர்கள் அப்புறபடுத்தப்படாமல் கிடக்கின்றன.

டெங்கு ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் வருகை தருவதை ஒட்டி முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் முக்கிய சாலைகள் தூய்மை செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஆனால் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் டயர்கள் அப்படியே கிடக்கின்றன. அதிகாரிகளும் எனக்கென்ன! என்ற போக்கில் கண்டும் காணாமல் இருக்கின்றனர். வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பே இந்த நிலை நிலவுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

மாவட்ட கலெக்டர் இதை பார்த்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது.