முத்துப்பேட்டையில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை…

முத்துப்பேட்டையில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.

கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதை அடுத்து திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளது. இதன்காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது

முத்துப்பேட்டை பகுதியிலும் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் முத்துப்பேட்டை பகுதி பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. குளம், ஏரி, குட்டைகள் மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மழை தொடர்ந்து பெய்து வருவதால் தீபாவளிக்கு தேவையான பொருட்கள், பட்டாசுகள் மற்றும் புத்தாடைகள் வாங்குவதற்கு மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஒரு புறம் நிலத்தடி ஆதாரமான நீர்நிலைகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த மழை பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பது பல்வேறு மக்களின் பிராத்தனையாகவும் உள்ளது.