முத்துப்பேட்டை மஜக சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி…

முத்துப்பேட்டை பேரூராட்சி துப்பரவு பணியாளர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் மேலும் தீபாவளி பரிசாகவும் பணியாளர்களுக்கு மஜக சார்பில் இன்று பிரியாணி உணவு வழங்கப்பட்டது.

முத்துப்பேட்டை நகர தூய்மைக்கு ஆதாரமாக விளங்கக்கூடியவர்கள் நமது பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் என்பது நிதர்சனமான உண்மை. அவர்களின் சேவையை போற்றும் விதமாகவும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் தீபாவளி சிறப்பு பரிசாக இன்று மதியம் 50 பேருக்கு முத்துப்பேட்டை மஜக சார்பில் பிரியாணி உணவு வழங்கப்பட்டது,

இதில் நகர மஜக ஒன்றிய செயலாளர் முகமதுமைதீன் தலைமை தாங்கி உணவுகளை வழங்கினார். மேலும் மஜக உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.