முத்துப்பேட்டையில் பைக் திருடர்கள் கைது…

முத்துப்பேட்டை பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கைது.

முத்துப்பேட்டை கோவிலூரை சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் தனது இருசக்க வாகனத்தை இரவு உறங்க செல்வதற்கு முன் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். அடுத்தநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. அதேபோல் முத்துப்பேட்டை தர்மர் கோவிலை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரின் வாகனமும் இரவு உறங்கும் நேரத்தில் திருடப்பட்டது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு போலீஸார் திருடர்களை தேடி வருகின்றனர் என்று நாம் முன்னரே பதிவு செய்திருந்தோம்.

முத்துப்பேட்டை காவல் துறையினர் அந்த திருட்டு கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் கோவிலூரை சேர்ந்த சேகர் மகன் அசோக் என்ற ஜெயபால் (24), முத்துப்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் மகன் வெங்கடேசன் (22), முத்துப்பேட்டை – பட்டுக்கோட்டை சாலையை சேர்ந்த அஜீத் (22) ஆகிய 3 பேரையும் பிடித்து சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து முத்துப்பேட்டை காவல் துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.