அதிராம்பட்டினம் அருகே விபத்து…

அதிராம்பட்டினம் அருகே கார் மற்றும் இருசக்க வாகனம் மோதி விபத்து.

அதிராம்பட்டினம் அருகே சேன்டாக்கோட்டை என்ற இடத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் வாய்க்காலில் உள்ள மரத்தில் மோதியது. அதிஸ்டவசமாக கார் மற்றும் மோட்டரில் வந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அதிராம்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் விபத்தில் சிக்கிய கார் முத்துப்பேட்டையை சேர்ந்தது என்பதும் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிராம்பட்டினம் பகுதியில் அடிக்கடி விபத்துகள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.