பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் கடல் போல் காட்சியளிக்கிறது…

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தை மழைநீர் சூழ்ந்து உள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது.

தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்து மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. அதன் விளைவாக பட்டுக்கோட்டை பகுதியிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் மழைநீர் கடல் போல் சூழ்ந்துள்ளதால் பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.