முத்துப்பேட்டையில் அரசு பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து..

முத்துப்பேட்டை புறவழிச் சாலையில் அரசு பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து.

தமிழக அரசு பண்டிகை காலங்களில் பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த வருடமும் தீபாவளிக்கு அதிகமான சிறப்பு பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது.

சென்னையிலிருந்து இராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு விரைவுப் பேருந்து சனிக்கிழமை இரவு புறப்பட்டது. இன்று அதிகாலை 3 மணியளவில் முத்துப்பேட்டை புறவழி சாலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணித்த பயணிகள் எந்த காயங்களுமின்றி அதிஸ்டவசமாக தப்பினர். தடுப்பு சுவரின் மீது நின்ற அரசுப் பேருந்தை பொக்லைன் உதவியுடன் மீட்டனர். இந்த பகுதியில் அடிக்கடி இரவு நேரங்களில் விபத்து ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பாக முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.