முத்துப்பேட்டை அடுத்த கோட்டூரில் மதுபாட்டில்கள் கடத்தல்…

முத்துப்பேட்டை அடுத்த கோட்டூரில் 7 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கடத்தல்.

கோட்டூர் அருகே போலீஸார் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாரியில் இருந்து 2 மினி வேன்களில் மதுபாட்டில்களை சிலர் மாற்றி கொண்டு இருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

வாகனங்களை சோதனை செய்தபோது அதில் 7,240 மதுபாட்டில்கள் இருந்தன. அதன் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் என கூறப்படுகிறது. 2 மினிவேன்கள் மற்றும் 7,240 மதுபாட்டில்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த கடத்தல் கும்பல் நாமக்கலில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கர்நாடக மாநிலம் பெங்களூரு சேர்ந்த மோகன் (வயது51), லாரி டிரைவர் நாகை மாவட்டம் சேர்ந்த ராஜா(25) என்பதும், காரைக்காலில் இருந்து காரியமங்கலத்திற்கு லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.