நாச்சிகுளம் இரயில்வே பணி ஓர் பார்வை..!

நாச்சிகுளத்தில் இரயில்வே அகலபாதை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளத்தில் இரயில்வே நிலையம் மற்றும் அகல பாதை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காரைக்குடி மற்றும் பட்டுக்கோட்டை இடையே இரயில் சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது.

அடுத்த கட்டமாக திருவாரூர் மற்றும் பட்டுக்கோட்டை இடையே இரயில்வே பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் அடுத்த வருடம் ஜூன் மாதம் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதை அமைக்க 260m நீளம் கொண்ட தண்டவாளங்கள் தயார் நிலையில் உள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் அகலபாதை பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.