சாலைகளில் நிரம்பி வழியும் குப்பை தொடரும் அவலம்…

முக்கிய சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து வரும் குப்பை கூளங்கள். எப்போது முடிவுக்கு வரும் பொதுமக்கள் கவலை.

முத்துப்பேட்டை ராமஜெயம் மண்டபம் அருகில் புதுமனை தெரு 16 வார்டு சாலைகள் குப்பை கூளங்களால் நிரம்பி வழியும் அவலம் தொடர்கிறது. பொதுமக்கள் நடக்ககூட வழியில்லா நிலை உருவாகி உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அந்த சாலையை பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் சரியாக பராமரிக்க தவறியதால் நாளுக்கு நாள் குப்பைகள் அதிகரித்து வருகின்றது.

பொதுமக்களுக்கு தேவையான குப்பை தொட்டிகள் பல பகுதிகளில் வைக்கப்படாததால் குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் வைக்கப்படுவதால் மாடுகள் தொட்டிகளை சேதப்படுத்தி விடுகின்றன.

இந்த பகுதி அசுத்தங்களை பற்றி நாம் பலமுறை பதிவிட்டு இருந்தோம். ஆனால் இன்று வரை அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அசையாத வண்ணம் குப்பை தொட்டிகள் அமைக்க வேண்டும் என்பது 16 வது வார்டு மக்களின் கோரிக்கையாக உள்ளது.