அதிரையில் சிக்கிய நவீன கால ஆடு திருட்டு கும்பல்…!

அதிராம்பட்டினம் பகுதியில் ஆடுகளை திருடி வந்த கும்பல் கையும் களவுமாக பிடிபட்டனர்.

அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் பல மாதங்களாக ஆடுகள் தொடர்ந்து திருடப்பட்டு வந்துள்ளது. இதற்கான புகார்கள் நிலுவையில் இருந்த நிலையில் குற்றவாளிகள் யார் என்பது குறித்து சந்தேகம் நீடித்து வந்தது.

அதிராம்பட்டினம் அருகே காரில் வந்த 3 பேர் ஆடு திருட முயற்சி செய்தபோது அந்த பகுதி இளைஞர்கள் பார்த்ததால் தப்பிக்க வேகமாக காரை இயக்கினர். இளைஞர்கள் விடாமல் விரட்ட அந்த கார் நிலை தடுமாறி கல்லின் மீது மோதியது. அவர்களை கையும் களவுமாக பிடித்து அடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கும்பலை விசாரணை நடத்தியதில் இவர்கள் காரைக்குடியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் 6 மாதங்களில் 70க்கும் அதிகமான ஆடுகளை அதிரையில் மட்டுமே திருடியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.