கிட்டங்கி தெருவில் வீட்டு வாசலில் ஓடி கொண்டிருக்கும் கழிவுநீர்…

முத்துப்பேட்டை கிட்டங்கி தெருவில் 10 நாட்களுக்கு மேலாக வீட்டு வாசல்களில் ஓடி கொண்டிருக்கும் கழிவு நீர் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்.

8 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி கிட்டங்கி தெரு இந்த பகுதியில் 10 நாட்களுக்கு மேலாக கழிவுநீர் குழாய் அடைப்பின் காரணமாக கழிவு நீர் தெரு சாலைகளில் மக்கள் வசிக்கும் வீட்டு வாசல்களிலும் ஆறு போல் ஓடி கொண்டிருக்கிறது. அந்த பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் புகார் அளித்தும் பயனில்லை. இரண்டாவது முறை பேரூராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்து துப்பரவு பணியாளர்கள் வந்து பார்த்து விட்டு தீபாவளி கழித்து பார்க்கிறோம் என்று கூறி சென்றுள்ளனர். பேரூராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்கு தொடர் கதையாகவே உள்ளது.

சிறு குழந்தைகள் அதிகம் வசிக்கும் பகுதி இந்த 8 வது வார்டு பகுதி மேலும் பரவிவரும் தொற்று நோய்களை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் மக்கள் நலனில் அக்கறை கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது 8 வது வார்டு மக்களின் கோரிக்கையாக உள்ளது.