நமது பதிவின் எதிரொலி – பேரூராட்சியின் விரைவு நடவடிக்கை…

கிட்டங்கி தெருவில் சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் கழிவுநீர் இன்று சரிசெய்யப்பட்டது.

கிட்டங்கி தெரு 8 வது வார்டில் 10 நாட்களாக கழிவுநீர் சாலையின் மேல் தெருக்களில், குறிப்பாக மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகே ஓடி கொண்டிருக்கிறது என்று நாம் நேற்று பதிவு செய்திருந்தோம்.

அதன் எதிரொலியாக இன்று காலை பேரூராட்சி நிர்வாகத்தால் அந்த கழிவுநீர் தொட்டிகள் மற்றும் அடைப்புகள் சரி செய்யப்பட்டன. பொதுநலனுடன் விரைந்து நடவடிக்கை எடுத்த முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார்பாக நன்றி கூறி கொள்கிறோம்.