முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதியின்றி பயணிகள் தவிப்பு!

முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதியின்றி பயணிகள் தவித்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் திறந்து 26 வருடமாகிறது. அன்று முதல் இன்று வரை பேருந்து நிலையம் முழுமையான பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் தொடர் போராட்டம் மற்றும் பல்வேறு முயற்சிகளால் தற்போது பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இன்னிலையில் பேருந்து நிலையத்தில் கழிப்பறை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதிகள், மற்றும் குடிநீர் வசதிகள் இருந்தும் அவைகள் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் பயணிகள் வசதிக்காக பேருந்து நிலைய துவக்கத்தில் குடிநீர் டேங்க் வைத்து குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. நாளடைவில் பேரூராட்சி சார்பில் பராமரிக்கபடாததால் குழாய் மூலம் தண்ணீர் வருவது தடைப்பட்டு வெறும் குடிநீர் டேங்க் மட்டும் காட்சி பொருளாக இருந்து வந்தது. இதனால் குடிநீருக்காக தவிக்கும் பயணிகள் தாகத்தை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால், முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் வழக்கம் போல் கண்டுகொள்ளவே இல்லை.

இந்நிலையில் சென்ற மாதம் பேரூராட்சி நிலையத்தில் இருந்த குடிநீர் டேங்கை பேரூராட்சியில் பணியாற்றும் ஒருவர் குடிநீர் டேங்கை சுத்தம் செய்ய வேண்டும் குழாயை சரி செய்யம் பணியை துவங்க வேண்டும் அந்த குடிநீர் டேங்கை எடுத்து சென்றுள்ளனர். இதனால் மீண்டும் குடிநீர் வசதி பெரும் என்று நம்பிக்கையுடன் பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால் அன்று முதல் இன்று வரை குடிநீர் தொட்டி வைக்கவில்லை.

இதனால் குடிநீர் டேங்க் இருந்த இடம் பயணிகள் அமரும் இடமாக மாறியது. பின்னர் சமீபத்தில் அந்த கட்டையில் பேரூராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இங்கு குடிநீர் வசதி கிடையாது என்ற நிலைக்கு முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் தள்ளப்பட்டது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

பயணிகள் நலன் கருதி உடனே புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் குடிநீர் வசதியை பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்கள் கோரிக்கை வைத்து தர வேண்டும் என்று விடுத்துள்ளனர்.