திருவாரூர் மாவட்டத்தில் உச்சத்தை தொட்ட மது விற்பனை…

திருவாரூர் மாவட்டத்தில் உச்சத்தை அடைந்தது மது விற்பனை, 7 கோடிக்கு விற்பனை ஆனதாக தகவல்.

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமாக 100 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான மது விற்பனை செய்யப்படும். பண்டிகை நாட்களில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம். அதிலும் தீபாவளி பண்டிகை என்றால் மதுபிரியர்களின் அதிகபட்ச கொண்டாட்டத்தின் காரணமாக டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை பல மடங்கு நடைபெறும்.

இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் கூடுதலான மதுவகைகள் இருப்பு வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு மது, பீர் வகைகள் என மொத்தம் ரூ.7 கோடி மதிப்பிலான மதுவகைகள் விற்பனையானது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக மதுவிற்பனை நடைபெற்றுள்ளது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.