மது குடிக்க பணம் இல்லாமல் இளைஞர் தற்கொலை….

மதுவினால் தொடரும் கொலைகள் திருவாரூர் அருகே நிகழ்ந்த பரிதாபம்.

திருவாரூர் பகுதி விஜயபுரம் திலகர் முதல் தெருவை சேர்ந்தவர் முகமது யூசுப். இவருடைய மகன் அக்பர் பாஷா (வயது 17). இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் இவர் மதுகுடிப்பதற்கு தனது தாய் ஹஜிதாபேகத்திடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு பணம் தர மறுத்து கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அக்பர் பாஷா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருவாரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞரின் இந்த துணிகர செயல் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.