பேரூராட்சியின் வரி வசூலுக்கு ஏற்ப வசதிகள் இல்லை – அமமுக புகார்…

முத்துப்பேட்டை அமமுக சார்பில் இன்று அடிப்படை வசதிகள் செய்துதர கோரி மனு அளிக்கப்பட்டது.

முத்துப்பேட்டை பகுதியில் தொடர்ந்து பல மாதங்களாக சுகாதார கேடு விளைவிக்கும் வகையில் அனைத்து வார்டுகளிலும் குப்பைகளும், கழிவு நீரும் சாலை மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கிடப்பில் கிடக்கிறது. முத்துப்பேட்டை பகுதி மக்களிடம் வரி வசூல் அதிகம் செய்வதாகவும் மேலும் திட கழிவுக்கு தனியாக வரிவசூல் செய்வதாகவும் ஆனால் இன்று வரை அதற்கான ஒரு முறையான கிடங்குகள் இல்லை என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டனர்.

பராமரிப்பு இல்லாமல் இருக்கும் முத்துப்பேட்டை நகரத்தை முறையாக அடிப்படை வசதிகள் அனைத்தையும் உடனே செய்து முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு அமமுக நகர செயலாளர் லக்கி நாசர் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உடன் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இருந்தனர்.