கொட்டும் மழையிலும் தொடரும் நிவாரணம்.!

கஜா புயலால் பெரிதும் சேதமடைந்தது நாம் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, கூரை மற்றும் ஒட்டு வீடுகளில் வசிப்பவர்கள் தங்களின் வீடுகளை முற்றிமூலமாக இழந்து தவித்து வருகின்றனர்.

இது போன்ற மக்களுக்கு தொடர்ந்து பலர் உதவி செய்துவந்துகொண்டிருக்கும் நிலையில், நேற்று ஆலங்காடு வட்டம் சிறுபட்டாகரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் வசிக்கும் சுமார் 70 குடும்பங்களுக்கு தார்பாய்(sheet), அரிசி போன்றவைகள் வெளிநாட்டு வாழ் நண்பர்கள், வெளியூர் நண்பர்கள் சார்பாக நேற்று வழங்கப்பட்டது.

படங்கள்:

அதேபோல் நேற்று முன்தினம்(23.11.2018) முத்துப்பேட்டை கொய்யா தோப்பு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 குடும்பங்களுக்கு தார்பாய்(sheet), அரிசி போன்றவைகளும் வெளிநாட்டு வாழ் நண்பர்கள், வெளியூர் நண்பர்கள் சார்பாக நேற்று வழங்கப்பட்டது.

படங்கள்: