கஜா புயலால் வீடுகளை இழந்த சுமார் 35 குடும்பங்களுக்கு முத்துப்பேட்டை வெளிநாட்டு வாழ் நண்பர்கள் உதவி.!


கஜா புயலால் பாதிக்கப்பட்ட முத்துப்பேட்டை சுற்றுவட்டார கிராமங்களுக்கு நேற்று முன்தினம்(23.11.2018) நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக தொண்டி மற்றும் முத்துப்பேட்டை இளைஞர்கள் இணைந்து சித்தமல்லிக்கு அருகிலிலுள்ள “சோத்திரியம்” எனும் பகுதிக்கு சென்றுள்ளனர்.

கிராம மக்களின் அவல நிலை கண்டு அதிர்ச்சி:

நிவாரண பொருட்களை வழங்க சென்ற தொண்டி மற்றும் முத்துப்பேட்டை இளைஞர்கள் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களின் வீடுகளை இழந்து வாடும் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு, இந்த பகுதியில் மொத்தம் எத்தனை வீடுகள் உள்ளது என்பதை அந்த கிராம மக்களிடமே கேட்டு அறிந்து கொண்டனர். பின்னர், அந்த பகுதியில் வசிக்கும் கிராம மக்களின் அவல நிலை குறித்து ஒரு வீடியோ எடுத்துக்கொண்டு நாங்கள் கண்டிப்பாக இந்த பகுதிக்கு உங்களின் அவசிய தேவையான தார்பாய்யுடன் வருகிறோம் என உறுதி அளித்துவிட்டு சென்றுள்ளனர்.

முத்துப்பேட்டை வெளிநாட்டு வாழ் நண்பர்கள் நிதி உதவி:

அந்த கிராமங்களின் நிலை பற்றி தொண்டி மற்றும் முத்துப்பேட்டை உள்ளூர் இளைஞர்கள் எடுத்த விடியோவை முத்துப்பேட்டை வெளிநாட்டு வாழ் நண்பர்களுக்கு வாட்ஸாப்ப்(WhatsApp) மூலம் அனுப்பியுள்ளனர். அந்த விடியோவை கண்ட முத்துப்பேட்டை வெளிநாட்டு வாழ் நண்பர்கள் உடனே தங்களிடம் இருக்கும் பணத்தை திரட்டி அந்த பகுதிகளில் வசிக்கும் சுமார் 35 குடும்பங்களின் உடனடி தேவையான தார்பாய் வாங்க நிதியை உள்ளூர் முத்துப்பேட்டை நண்பர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

தார்பாய் வழங்கப்பட்டது:

முத்துப்பேட்டை வெளிநாட்டு வாழ் நண்பர்கள் அனுப்பிய நிதி மூலம் சுமார் 35 தார்பாய்கள் வாங்கிக்கொண்டு நேற்று இரவு(24.11.2018) தொண்டி மற்றும் முத்துப்பேட்டை இளைஞர்கள் நேரில் சென்று அந்த கிராமக்களிடம் வழங்கினர்.

கிராம மக்கள் நன்றி:

உங்களின் இந்த உதவி எங்களுக்கு மிகவும் பெரியது. “காலம் காலமாக இதை நாங்கள் மறக்கவே மாட்டோம்”, “நீங்க எல்லாரும் பல வருஷம் நல்ல இருக்கனும் தம்பி” என்று வாழ்த்துக்களுடன் கலந்த நன்றியை மனதார தெரிவித்தனர்.