முத்துப்பேட்டையில் 4 வீட்டு குடும்பத்தினர் பஸ் ஸ்டாப்பில் தஞ்சம்.!

முத்துப்பேட்டை மன்னார்குடி சாலையில் சித்தர்குளம் என்ற இடத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த சுமார் 100 ஆண்டு பழமையான புளிய மரம் கஜா புயலில் வேரோடு சாய்ந்ததில் அங்கு இருந்த ராஜம்மாள், பக்கிரி, உள்ளிட்ட 4 வீடுகளில் விழுந்து வீடுகள் முழுவதும் சேதம் அடைந்தது. இதனால், கடந்த 10 ஆண்டுகளாக வீட்டிற்குள் உள்ள பொருட்களை எடுக்க முடியாமலும், வீட்டிற்கும் உள்ளே செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.

எந்த நடவடிக்கையும் இல்லை:

இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் எடுத்து கூறியும் இதுவரை விழுந்து கிடக்கும் அந்த புளியமரத்தை வெட்டி அகற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

பஸ் ஸ்டாண்டில் தஞ்சம்:

எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வீடுகள் சேதமடைந்த 4 குடும்பத்தினர் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் தங்கி வருகின்றனர்.