அரசு பாதுகாப்பு முகாம் ஒதுக்காததால், முத்துப்பேட்டை அருகே 100க்கும் மேற்பட்டோர் சுடுகாட்டில் தஞ்சம்.!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம், பின்னத்தூர் தெற்கு ஜீவா நகர் மக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 16ந் தேதி வீசிய கஜா புயலால் வீடுகளை இழந்தனர். இதையடுத்து அந்த மக்கள், திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை ஓரத்திலுள்ள சுடுகாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அங்கே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இளைஞர்கள், சில அமைப்புகள் கொடுக்கும் பொருட்களை கொண்டு 10 நாட்களாக சுடுகாட்டிலேயே சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். இவர்களுக்கு அரசு பாதுகாப்பு முகாம் எதையும் ஒதுக்காத நிலையில் சுடுகாட்டிலேயே சமைத்து சாப்பிட்டு மற்றும் தங்கி வரும் அவல நிலை தொடர்கிறது.