வேதாரண்யம் தாலுகா – கள்ளிமேடு மற்றும் நலுவேடபதி கிராமங்களில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.!

நேற்று முன்தினம்(25-11-2018) வேதாரண்யம் தாலுகா – கள்ளிமேடு மற்றும் நலுவேடபதி கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு அத்தியாவசிய தேவையான பால், அரிசி போன்ற நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும், கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு 100 தார்பாய் திரு. ரத்தின ராஜராஜன் அவர்கள் திரட்டிய நிதி மூலம் பெறப்பட்டு அங்கு விநியோகம் செய்யப்பட்டது.

மேற்குறிய அணைத்து நிவாரண பொருட்களும் முத்துப்பேட்டையில் இருந்து அனுப்பப்பட்டு அங்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக CTS நிறுவனத்தில் பணிபுரியும் திரு. ரத்தின ராஜராஜன் அவர்கள் கடந்த 10 நாட்களாக அந்த கிராமத்திலேயே முகாமிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் இரவினில் நிவாரண பொருட்களை திரட்டி, பகலில் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார். இரவு பகல் பாராமல் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்காக களத்தில் இருக்கும் இவரின் சேவை அளப்பரியது.