முத்துப்பேட்டை துப்புரவு தொழிளாலர்களுக்கு தமுமுக & மமக சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.!

கஜா புயலினால் முத்துப்பேட்டையில் பல்வேறு வீடுகள், மரங்கள், சாலைகள் போன்ற எண்ணற்ற சேதங்கள் ஏற்பட்டது. இந்த சேதத்தினால் முத்துப்பேட்டை பல்வேறு தெருக்கள், சாலைகள் தூய்மையின்றியும் காணப்பட்டது.

இதனால் பல்வேறு அமைப்புகள், இளைஞர்கள், இயக்கங்கள், மற்றும் பல்வேறு தன்னார்வலர்கள் களமிறங்கி சீரமைப்பு பணியில் ஈடுபட்டார்கள். எனினும், இந்த சீரமைப்பு பணியில் முத்துப்பேட்டை நகரத்தை விரைவாக தூய்மைப்படுத்திய பங்கு முத்துப்பேட்டை துப்புரவு தொழிலார்களுக்கும் உண்டு.

எனவே, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அவர்களை ஊக்கிவிக்கும் வகையிலும் முத்துப்பேட்டை நகர தமுமுக மற்றும் மமக சார்பாக சமையல் பொருள்கள், போர்வை இன்று வழங்கப்பட்டது. இதை முத்துப்பேட்டை நகர மமக செயலாளர் D.காமிம் வழங்கினார். உடன் ஜமாத் துனை தலைவர் சேட் நஜிம், வக்கீல் தீன் முஹம்மது, 3-வது வார்டு செயலாளர் பாசித் அவர்களும் இருந்தனர்.