முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் மீது பிடி வாரன்ட்..

முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது மணப்பாறை நீதிமன்றம்.

இரண்டு வருடத்திற்கு முன் திருச்சி துவரங்குறிச்சி பகுதியில் ஏற்பட்ட ஒரு விபத்தில் சின்னக்காளை என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அப்போது அந்த பகுதியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துவேல் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து மணப்பாறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

இதனையடுத்து வழக்கு விசாரணையின்போது இன்ஸ்பெக்டர் ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று பலமுறை நினைவு கூறப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மறுத்த இன்ஸ்பெக்டர் மீது மணப்பாறை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.