முத்துப்பேட்டை அருகே வீட்டிற்குள் புகுந்த விஷத்தன்மையுள்ள பாம்பு.!

முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் வடகாடு பகுதியை சேர்ந்த பாரதி என்பவரது வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது.

இதனைக்கண்ட பாரதி முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு நிலைய அலுவலர் செழியன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் புகுந்த பாம்பை உயிருடன் பிடித்தனர். விஷத்தன்மையுள்ள இந்த பாம்பு சுமார் 5 அடி நீளம் இருந்தது. பின்னர், அந்த பாம்பை முத்துப்பேட்டை வனப்பகுதியில் விட்டனர். இதனால், அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.