விரைந்து வழங்கப்பட்ட மின் வினியோகம் – கைமாறு செய்த அதிரையர்கள்…

மின் வாரிய ஊழியர்களுக்கு விருந்தளித்து அதிராம்பட்டினம் மக்கள் மகிழ்வித்தனர்.

முத்துப்பேட்டையை அடுத்த அதிராம்பட்டினத்தில் கஜா புயலால் பல மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகள் சேதமடைந்தது. இதனையடுத்து மின் கம்பங்கள் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று தற்போது அதிராம்பட்டினத்தில் பல பகுதிகளுக்கு மின்சார சேவை வழங்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு பணிக்காக வெளியூர்களில் இருந்து அதிகளவு மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டது மின் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற முக்கிய காரணமாக அமைந்தது. அந்த பணியாளர்களையும் அதிகாரிகளையும் கவுரவிக்கும் விதமாக அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக லாவண்யா திருமண மண்டபத்தில் இன்று விருந்து உபசரிப்பு நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

முத்துப்பேட்டை பகுதியில் புயல் பாதிப்பு ஏற்பட்டு 12 நாட்கள் கழிந்தும் ஒரு பகுதியில் கூட மின் விநியோகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.