எப்போ கரண்ட் வரும்.? முதலமைச்சரின் பதில்..

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளை நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து மக்களுக்கு ஆறுதல் கூறினார். அதன் பின்னர் மக்களின் மிக அத்தியாவசிய தேவையான மின்சார விநியோகம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு முதல்வர் “பெரும்பாலான மக்கள் விரைந்து மின்சார வசதி வழங்க வேண்டும் என்றனர். ஒருசில இடங்களில் குடிநீர் வசதிக்கான கோரிக்கை விடுக்கப்பட்டது. ‘கஜா’ புயலால் 1 லட்சத்து 13 ஆயிரம் மின்கம்பங்கள் ஒடிந்து சாய்ந்திருக்கிறது. எனவே மின்கம்பங்கள் ஊன்ற தேவையான குழியை பறிக்க வேண்டும். நம்முடைய மின்சார ஊழியர்கள் போர்க்கால அடிப்படையிலே மின் கம்பங்களை ஊன்றி வருகின்றனர். கிட்டத்தட்ட 24 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கேரளா, ஆந்திராவில் இருந்தும் மின் ஊழியர்களை வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். 4 அல்லது 5 நாட்களுக்குள் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டு விடும்” என்று கூறினார்.

திருவாரூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் குறிப்பாக முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 13 நாட்கள் ஆகியும் மின் வினியோகம் வழங்கப்படவில்லை. முத்துப்பேட்டை மக்கள் இரண்டு முறை சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் இன்னும் மின் வினியோகம் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.