நெஞ்சை உருக்கும் அலையாத்தி காட்டின் தற்போதைய நிலை..

முத்துப்பேட்டையின் இயற்கை எழில் கொஞ்சும் முகவரி இன்று சிதைந்து கிடக்கும் பரிதாபம்.

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சுற்றுலா தலங்களில் இயற்கை அழகு நிறைந்த சுற்றுலாத்தலமாக திகழ்ந்து வருவது முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள். மொத்தம் முத்துப்பேட்டை பகுதியில் 11,885,91 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படக்கூடிய இக்காடுகள் திருவாரூர்,தஞ்சை, நாகை மாவட்டங்களில் பரவி உள்ளது. காவிரி ஆற்றுப் படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திகாடு அமைந்துள்ளது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை உலுக்கிய கஜா புயல் முத்துப்பேட்டை பகுதியை புரட்டி போட்டது. இந்த கோர தாண்டவம் முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளையும் விட்டு வைக்கவில்லை. அலையாத்தி சதுப்பு நில காடுகள் புயலினால் உருமாறி போனது. அதுமட்டுமல்லாமல் இங்கு வாழ்ந்த அரியவகை பறவைகள் மற்றும் விலங்குகள் புயலின் காரணமாக அழிந்து போய் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முத்துப்பேட்டை அரணாக இருந்து பாதுகாத்து வந்த அலையாத்தி காட்டின் தற்போதைய நிலை முத்துப்பேட்டை மக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது. கஜா புயலின் கோர தாண்டவத்தால் அலையாத்தி காடுகள் தன் இயற்கை கொஞ்சும் தோற்றத்தை இழந்துள்ளது.

கஜா புயலின் கோர தாண்டவம்: