கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர் எச்சரிக்கை…

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இடையூறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திரு நிர்மல் ராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதித்து 14 நாட்கள் ஆகியும் இதுவரை மின்சார வினியோகம் இல்லை சரியான முறையில் குடிநீர் வினியோகம் இல்லை மேலும் அரசு அலுவலர்கள் மக்களை நேரில் சந்திக்கவில்லை என்று பல குறைபாடுகள் நிலவி வருகிறது. பொதுமக்கள் உணவு மற்றும் தங்கும் இடம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கிராமப்புற மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அடிக்கடி நடைபெறும் சாலை மறியல் நிவாரணப் பொருட்கள் சேருவதற்கு இடையூறாக இருந்து வருகிறது. புயல் பாதிப்பு குறித்த கணக்கெடுப்புகள் ஒருதலை பட்சமாக நடைபெறுவதாக குற்றச்சாட்டு பொதுமக்கள் இடையே நிலவி வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ் அலுவலர்கள் இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் பொதுமக்கள் 1077 , 04366- 226040 ,226050, 226080, 226090 ஆகிய எங்களுக்கு புகார் அளிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.