மின் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கு இடையே தகராறு – வாகனங்கள் உடைப்பு…

கொரடாச்சேரி பகுதியில் மின் கம்பம் சீரைப்பு பணியின் போது அப்பகுதி மக்களுக்கும் மின் வாரிய ஊழியர்களுக்கும் இடையே தகராறு, வாகனங்கள் உடைப்பு – போலீஸார் வழக்கு பதிவு.

கொரடாச்சேரி அருகே உள்ள பகுதியில் மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்பகுதியில் உயர் அழுத்த மின்சார கம்பிகளை குடியிருப்பு பகுதியில் பயன்படுத்த வேண்டாம் என்று அப்பகுதியில் உள்ள சிலர் கூறினர்.

அப்போது பணியில் ஈடுபட்டு இருந்த மின்வாரிய ஊழியர்களுக்கும், அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கிராம இளைஞர்கள் மின்வாரிய ஊழியர்களை தரக்குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் மின் வாரிய வாகனங்களையும் அடித்து உடைத்து ஏற்பட்ட ரகளையில் இரு தரப்பினரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் மாறி மாறி அளித்த புகாரின் பேரில் கொராடாசேரி போலீஸார் இருதரப்பு சேர்ந்த 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.