அதிராம்பட்டினத்தில் விபத்து…

முத்துப்பேட்டை அடுத்த அதிராம்பட்டினத்தில் நேற்று இரவு சாலை விபத்து.

அதிராம்பட்டினம் அருகே கருங்குளம் என்ற பகுதியில் நேற்று இரவு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வேன் காரைக்கால் நோக்கி சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே கருங்குளம் என்ற பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் பெரிய உயிர் சேதம் ஏதுமின்றி பயணம் செய்த அனைவரும் அதிஸ்டவசமாக உயிர் தப்பினர்.

சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தகவல் கொடுத்ததன் அடிப்படையில் பயணம் செய்த 4 பேரும் மீட்கப்பட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர்

இதனை அடுத்து முதலுதவிக்கு பின் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அதிராம்பட்டினம் நகர தமுமுக ஆம்புலன்ஸ் உதவியுடன் சேர்க்கப்பட்டனர்.