முத்துப்பேட்டை அருகே அனுமதியின்றி மது விற்ற இருவர் கைது!

முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை பகுதியில் அனுமதியின்றி மதுபானம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து எஸ்ஐ கணபதி தலைமையில் போலீசார் சம்மந்தப்பட்ட பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அனுமதியில்லாமல் மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஜாம்புவானோடை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன்(46), அதே பகுதியை சேர்ந்த பரிமளம் மகன் சுப்பிரமணியன்(43) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஏராளமான மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.