முத்துப்பேட்டை அருகே வித்தியாசமான நிவாரணம் வழங்கிய ஜிவி பிரகாஷ்…

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பல்வேறு திரையுலக பிரபலங்கள் பார்வையிட்டும் மேலும் நிவாரணப் பொருட்களை வழங்கியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியும் வருகின்றனர்.

தமிழ் சினிமா துறையை சார்ந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் ஏழை பெண்களுக்கு கலப்பை மக்கள் இயக்கத்துடன் இணைந்து 500 பசு கன்றுகளை வழங்கினர்.

முத்துப்பேட்டை அருகில் பரக்கலைகோட்டை என்ற கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 20 பசு கன்றுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜிவி பிரகாஷ்குமார், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்காலத்தில் பயன்படும் வகையில் பசு கன்றுகள் வழங்கியதாக கூறினார்.