கஜா புயலால் பாதித்த வியாபாரிகளுக்கு கடை வாடகை தள்ளுபடி – வர்த்தக சங்க நிர்வாகிகள் முடிவு.!

முத்துப்பேட்டை கஜா புயலால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டது. இதனால் தற்போது வரை மின்சார வசதி இல்லாமலும், போதிய தண்ணீர் வசதி இல்லாமலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் பெரியக்கடை பகுதி வியாபாரிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த 2 இரண்டு வாரங்களாக வியாபாரத்தில் ஈடுபட முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பெரியக்கடை தெரு வர்த்தகக் கழக தலைவர் ஜெகபர் அலி. பொருளாளர் ஷேக் தாவூது, துணைத்தலைவர்கள் வெற்றி, தம்பி மரைக்காயர் மற்றும் நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு வர்த்தகக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்தபடி பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் இடத்தின் உரிமையாளர்களை சந்தித்து ஒரு மாத வாடகையை தள்ளுபடி செய்ய வலியுறுத்தப்படும் என்று வியாபாரிகளிடம் தெரிவித்தனர்.