முத்துப்பேட்டையில் ஒருவர் மீது சரமாரி அரிவாள் வெட்டு.!

முத்துப்பேட்டையில் வசிக்கும் “அகமது ஜலாலுதீன்” என்பவர் M.M.A லாட்ஜும், பில்டிங் காண்ட்ராக்ட் தொழிலும் செய்து வருகிறார். இவர், நேற்று (02-12-2018) மாலை சுமார் 7.30 மணி அளவில் வசந்த், பிரசாந்த், மற்றும் வீரசேகர் என்பவரால் கொடூரமாக அரிவாளால் வெட்டுப்படுள்ளார்.

எதனால் இந்த பிரச்சனை?

“அகமது ஜலாலுதீன்” வாக்குமூலத்தின் படி, நேற்று முன்தினம்(01-12-2018) முத்துப்பேட்டையை சேர்ந்த வசந்த், பிரசாந்த் மற்றும் வீரசேகர் என்பவர்கள் ஒரு நாள் வாடகைக்கு M.M.A லாட்ஜில் தங்கி இருக்கிறார்கள். மேலும், 02-12-2018ம் தேதி 12 மணிக்கு காலி செய்ய செய்வதாக இருந்தது. ஆனால், அவர்கள் குறிப்பிட்ட நேரம் முடிந்தும் காலி செய்யாமல் இருந்ததால் “அகமது ஜலாலுதீன்” எனபவர் வசந்த், பிரசாந்த் மற்றும் வீரசேகர் தங்கியிருந்த ரூமிற்கு சென்று காலி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனால், குடிபோதையில் இருந்த வசந்த், பிரசாந்த் மற்றும் வீரசேகர் “ரூமையெல்லாம் காலி செய்யமுடியாது, இரவு 10 மணிக்கு தான் காலி செய்வோம் என்றும் கூறியுள்ளனர். அதற்கு “அகமது ஜலாலுதீன்” அப்படியென்றால் நீங்கள் இரண்டு நாள் வாடகை தர வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதற்கு வசந்த் மற்றும் பிரசாந்தும் “அகமது ஜலாலுதீனை” கொச்சை வார்த்தைகளில் திட்டியுள்ளார்கள். இதனால் “அகமது ஜலாலுதீன்” அந்த இடத்திலிருந்து விடைபெற்று சென்றுள்ளார்.

“அகமது ஜலாலுதீன்” மீது சரமாரி அரிவாள் வெட்டு:

“அகமது ஜலாலுதீன்” வாக்குமூலத்தின் படி, இன்று(02-12-2018) இரவு “அகமது ஜலாலுதீன்” தனது வீட்டில் முன்பு சுமார் 7.30 மணிக்கு நின்றுள்ளார். அப்போது, அங்கு வந்த வசந்த், பிரசாந்த் மற்றும் வீரசேகர் “என்னடா நாங்க ஜாலியா இருக்கும் போது பணம் கேக்குறே” என்று கூறி கையில் வைத்திருந்த கிரிக்கெட் பேட் மூலம் அகமது ஜாலூலுதீன் தலையிலும், தோல்கட்டையிலும் சரமாரியாக அடித்துள்ளனர். அப்போது “இவனை கொல்லுங்கடா” என்று வசந்த் பிரசாந்திடம் கூறியிருக்கிறார். அதன்பின், பிரசாந்த் கையில் வைத்திருந்த அரிவாளால் “அகமது ஜலாலுதீனை” அரிவாளால் வெட்டினான். அரிவாளால் வெட்டுப்பட்ட “அகமது ஜலாலுதீன்” சம்பவ இடத்திலியே மயங்கி விழுந்துவிட்டார்.

வெட்டியவர்கள் தப்பி ஓட்டம்:

“அகமது ஜலாலுதீன்” வாக்குமூலத்தின் படி, அரிவாளால் வெட்டுப்பட்ட “அகமது ஜலாலுதீன்” சம்பவ இடத்திலியே மயங்கி விழுந்ததுடன் அருகில் இருந்த “ஜைனுலாபிதீன்” மற்றும் “நியாஸ்” ஆகிய இருவரும் தடுத்து சத்தம் போட்டனர். அதன்பின், அங்கு நின்றுகொண்டிருந்த அம்பாசிடர் வாகனத்தில் வசந்த், பிரசாந்த் மற்றும் வீரசேகர் தப்பி ஓடினர்.

“அகமது ஜலாலுதீன்” மருத்துவமனையில் அனுமதி:

அரிவாளால் வெட்டப்பட்ட “அகமது ஜலாலுதீன்” அவர்களை ஆட்டோவில் ஏற்றி சென்று முத்துப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர் முத்துப்பேட்டை பொதுமக்கள். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது, முத்துப்பேட்டை போலீசார்கள் “அகமது ஜலாலுதீன்” அவர்களிடம் நடந்ததை கேட்டு எழுதிக்கொண்டனர். அப்போது “அகமது ஜலாலுதீன்” அவர்கள் உடனே நடவடிக்கை எடுக்கமாறு முத்துப்பேட்டை போலீசாரிடம் கோரிக்கை வைத்தார்.