முத்துப்பேட்டை தொழில் அதிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம். இருவர் கைது, ஒருவர் தலைமறைவு!

நேற்று முன்தினம் (02-12-2018) முத்துப்பேட்டை தொழில் அதிபர் “அகமது ஜலாலுதீன்” சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குமரய்யா மகன் வசந்தகுமார்(23), கோவிலூரை சேர்ந்த ஆதிமுத்து மகன் வீரசேகர்(23), தெற்குகாட்டை சேர்ந்த ராஜசேகர் மகன் பிரசாந்த்(23) ஆகிய மூவரின் மேல் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி.

இதில் வசந்தகுமார், வீரசேகர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு தலைமறைவான பிரசாந்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.