முத்துப்பேட்டையில் சாலை மறியல். கோரிக்கைகள்..?

முத்துப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து வீடுகளையும் சீரமைக்க தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். புயலால் உயிரிழந்த அனைவருக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வேலை வாய்ப்பினை இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கும், மீனவர்களுக்கும் ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

முத்துப்பேட்டை பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் நேற்று நடைபெற்றது. இதில் அக்கச்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 49 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக முத்துப்பேட்டை , திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி , நன்னிலம், பேரளம், குடவாசல், வலங்கைமான் மற்றும் நீடாமங்கலம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.